UA-201587855-1 Tamil369news கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு - முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு களமிறங்கும் தமிழ்நாடு

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு - முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு களமிறங்கும் தமிழ்நாடு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு களமிறங்குகிறது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் ஜனவரி 19ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பில் 522 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது. தமிழக வீரர், வீராங்கனைகள் 26 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு, புனேவில் நடந்த இரண்டாவது பதிப்பில் 88 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை