UA-201587855-1 Tamil369news மும்பைக்கு எதிராக 404 ரன்கள் குவித்து வரலாறு படைத்த பிரகார் சதுர்வேதி: யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு

மும்பைக்கு எதிராக 404 ரன்கள் குவித்து வரலாறு படைத்த பிரகார் சதுர்வேதி: யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு

கர்நாடகா பேட்ஸ்மேன் பிரகார் சதுர்வேதி மும்பைக்கு எதிரான கூச் பெஹார் டிராபி யு-19 இறுதிப் போட்டியில் 404 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் கூச் பெஹார் டிராபி இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்த 358 ரன்கள் சாதனையை முறியடித்தார். கூச் பெஹார் டிராபி இறுதிப் போட்டியில் முதன் முதலாக 400+ ரன்கள் விளாசி வரலாறு படைத்துள்ளார் பிரகார் சதுர்வேதி.

மும்பை அணி தன் முதல் இன்னிங்ஸில் 280 ரன்களுக்கு மடிய தொடர்ந்து ஆடிய கர்நாடகா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 890 ரன்களைக் குவித்து வரலாறு படைத்தது. இதில் பிரகார் சதுர்வேதி 46 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 638 பந்துகளில் 404 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். இந்த போட்டி சமனில் முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை