UA-201587855-1 Tamil369news ஜெகதீசன் இரட்டை சதம்: ரஞ்சி கோப்பை முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 489 ரன்கள் குவிப்பு

ஜெகதீசன் இரட்டை சதம்: ரஞ்சி கோப்பை முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 489 ரன்கள் குவிப்பு

கோவை: இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை போட்டி நேற்று முன்தினம் நாடு முழுவதும் தொடங்கியது. இதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி மற்றும் ரயில்வேஸ் அணி மோதும் போட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்று களம் இறங்கிய தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கோவை வீரர் ஜெகதீசன் 155 ரன், முகமது அலி 1 ரன்னுடன் ஆட்டத்தை தொடங்கினர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே முகமது அலி 5 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை