UA-201587855-1 Tamil369news மலேசிய ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக் - ஷிராக் ஜோடி

மலேசிய ஓபன் பாட்மிண்டன் | கால் இறுதி சுற்றில் சாட்விக் - ஷிராக் ஜோடி

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதேவேளையில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி காந்த், முன்னாள் உலக நம்பர் ஒன் வீரரான ஹாங்காங்கின் லாங் அங்கஸுடன் மோதினார். இதில் காந்த் 13-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை