புதுடெல்லி: இந்திய மல்யுத்த கள நிலவரத்தில் புதிய திருப்பமாக, ‘முன்னணி வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷிமாலிக், வினேஷ் போகத் ஆகியோர் எங்களின் வாழ்க்கையில் ஓராண்டை வீணாக்கி விட்டனர்’ என்று கூறி, அவர்களுக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட இளம் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம், ஹரியாணா, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகளில் 300-க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் காலை 11 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்