UA-201587855-1 Tamil369news ஜெர்மனி கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார்!

ஜெர்மனி கால்பந்தாட்ட ஜாம்பவான் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார்!

சால்ஸ்பர்க்: ஜெர்மனி அணியின் முன்னாள் வீரரும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் காலமானார். அவருக்கு வயது 78. இவர் தலைமையிலான ஜெர்மனி அணி கடந்த 1974-ல் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. யூரோ கோப்பை மற்றும் Ballon d'Or விருதையும் இவர் வென்றுள்ளார்.

கடந்த 1990-ல் உலகக் கோப்பை வென்ற ஜெர்மனி அணியின் பயிற்சியாளரும் இவர்தான். அவரது மறைவுக்கு இந்நாள் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதிலிருந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் ஆஸ்திரியாவில் உள்ள சால்ஸ்பர்க் நகரில் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை