சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - பஞ்சாப் இடையிலான ஆட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட் செய்த தமிழகஅணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. பாபா இந்திரஜித் 122 ரன்களும் விஜய் சங்கர் 85 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 131.4 ஓவர்களில் 435 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. விஜய் சங்கர் 217 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 130 ரன்களும், பாபா இந்திரஜித், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 187 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 294 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்