UA-201587855-1 Tamil369news கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நிறைவு: 98 பதக்கங்களுடன் தமிழகம் 2-ம் இடம்!

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நிறைவு: 98 பதக்கங்களுடன் தமிழகம் 2-ம் இடம்!

சென்னை: கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு நிறைவடைந்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 98 பதக்கங்களை வென்ற தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. முதல் முறையாக கேலோ இந்தியாவில் இந்த சாதனையை தமிழகம் படைத்துள்ளது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது. கடந்த மாதம் (ஜனவரி) 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் நடைபெற்றது. பல்வேறு வகையிலான விளையாட்டு பிரிவுகளில் இந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மொத்தம் 13 நாட்கள் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை