இஸ்லாமாபாத்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 பிளே ஆப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று 2 ஒற்றையர்ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தான் வீரர் ஐசம் அல் ஹக் குரேஷியுடன் மோதினார். இதில் ராம்குமார் ராமநாதன் 6-7 (3) 7-6 (4), 6-0 என்ற செட் கணக்கில் ஐசம் அல் ஹக் குரேஷியை வீழ்த்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்