UA-201587855-1 Tamil369news ஆல்ரவுண்டர்கள் அதிகம் இல்லாத ராஜஸ்தான் ராயல் அணி - ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

ஆல்ரவுண்டர்கள் அதிகம் இல்லாத ராஜஸ்தான் ராயல் அணி - ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது வழக்கம் போன்று இந்திய வீரர்களையே பெரிதும் நம்பி களமிறங்குகிறது. எனினும் இம்முறை ஆல்ரவுண்டர்கள் அதிகளவில் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக் ஆகியோர் தங்களது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல், ஆடம் ஸாம்பா ஆகியோருடன் அணி வலுவாக உள்ளது. கடந்த சீசனில் யுவேந்திர சாஹல் 21 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அவர், 187 விக்கெட்களை வேட்டையாடி டாப்பில் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை