UA-201587855-1 Tamil369news IPL 2024 | தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எப்படி? - முழு விவரம்

IPL 2024 | தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி எப்படி? - முழு விவரம்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மீண்டும் ஒரு முறை பட்டம் வெல்லும் முனைப்பில் எம்.எஸ்.தோனி தலைமையிலேயே களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் சிஎஸ்கே 5 முறை பட்டம் வென்றுள்ளது. இதுவரை அந்த அணி பங்கேற்ற 14 சீசன்களில் 12 முறை நாக் அவுட் சுற்றில் நுழைந்துள்ளது. முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தோனி புத்துணர்ச்சியுடன் திரும்பி உள்ளார்.

இந்த சீசனுக்காக சிஎஸ்கே 6 வீரர்களை புதிதாக ஏலம் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக நியூஸிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்லை ரூ.14 கோடிக்கு வாங்கியது. நடுவரிசையில் அம்பதி ராயுடு இடத்தை டேரில் மிட்செல் பூர்த்தி செய்யக்கூடும். நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கி உள்ளது சிஎஸ்கே. டேவன் கான்வே காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் அவரது இடத்தை ரச்சின் ரவீந்திரா நிரப்பக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை