UA-201587855-1 Tamil369news WPL 2024 | ரிச்சா கோஷ் அதிரடி; ஆர்சிபி அதிர்ச்சி தோல்வி - பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!

WPL 2024 | ரிச்சா கோஷ் அதிரடி; ஆர்சிபி அதிர்ச்சி தோல்வி - பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ். இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் வீராங்கனை ரிச்சா கோஷ், 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ், 58 ரன்கள் மற்றும் அலைஸ் கேப்ஸி 48 ரன்கள் எடுத்தனர். ஷ்ரேயங்கா பாட்டீல், ஆர்சிபி அணிக்காக அபாரமாக பந்து வீசினார். கடைசி ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தி 5 ரன்களை கொடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை