UA-201587855-1 Tamil369news பிடே கேண்டிடேட்ஸ் செஸ் | 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா, வைஷாலி தோல்வி

பிடே கேண்டிடேட்ஸ் செஸ் | 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா, வைஷாலி தோல்வி

டொராண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான டி.குகேஷ்- ஆர்.பிரக்ஞானந்தா நேருக்கு நேர் மோதினார்கள். இந்த ஆட்டத்தில் டி.குகேஷ் 33-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 29-வது காய் நகர்த்தலின் போது அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்தினார். ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி45-வது காய் நகர்த்தலின் போது பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்தார். அதேவேளையில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா 37-வது காய் நகர்த்தலின் போது அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவை வீழ்த்தினார். 2 சுற்றுகளின் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, டி.குகேஷ், விதித் குஜராத்தி, ஃபேபியானோ கருனா ஆகியார் தலா 1.5 புள்ளிகளை பெற்றுள்ளனர். பிரக்ஞானந்தா உள்ளிட்ட மற்ற 4 வீரர்களும் தலா 0.5 புள்ளிகளுடன் உள்ளனர். மகளிர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஆர்.வைஷாலி 34-வது காய் நகர்த்தலின் போது சீனாவின் டான் ஸோங்கிடம் தோல்வி அடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை