கொச்சி: சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன், துபாயில் பிறந்து வளர்ந்தவர். நடிப்புக்காகக் கேரளா வந்தார். பரதம் மற்றும் , கர்நாடக சங்கீதம் கற்றிருந்த அவர், கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘கினாவல்லி’என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் ஒரு பாடலையும் பாடியிருந்தார். சன்னி லியோன் நடித்த ரங்கீலா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்