UA-201587855-1 Tamil369news ‘தோனி விளையாடிய விதம் அற்புதம்’ - சொல்கிறார் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்

‘தோனி விளையாடிய விதம் அற்புதம்’ - சொல்கிறார் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சீசனில் சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. 192 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.

இறுதிக்கட்ட ஓவர்களில் 42 வயதான தோனி அதிரடியாக விளையாடி அனைவரையும் கவர்ந்தார். 16 பந்துகளை சந்தித்த அவர், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டம்தான் சென்னை அணி நிகர ரன் ரேட்டில் (0.976) பெரிய அளவில் பின்னடைவை சந்திப்பதில் இருந்து காப்பாற்றியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை