UA-201587855-1 Tamil369news கேண்டிடேட்ஸ் செஸ் இன்று தொடக்கம்: பிரக்ஞானந்தா, டி.குகேஷ், விதித் மீது எதிர்பார்ப்பு

கேண்டிடேட்ஸ் செஸ் இன்று தொடக்கம்: பிரக்ஞானந்தா, டி.குகேஷ், விதித் மீது எதிர்பார்ப்பு

டொராண்டோ: நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய பிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் இன்று தொடங்குகிறது.

இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா (2,747), டி.குகேஷ் (2,747), விதித் குஜராத்தி (2,747) ஆகியோருடன் ரஷ்யகிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சி (2,758), அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஃபேபியானோ கருனா (2,804), அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவ் (2,632), அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுரா (2,789), பிரான்ஸ் கிராண்ட்மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜா (2,760) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை