லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடந்த 44வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபீல்டிங் தேர்வு செய்தது. குயிண்டன் டி காக், கே.எல்.ராகுல் இணை ஓப்பனிங் இறங்கிய நிலையில், குயிண்டன் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டாயினிஸ் பூஜ்ஜியத்தில் வெளியேற லக்னோவின் தொடக்கம் சற்று தடுமாற்றமாக அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்