UA-201587855-1 Tamil369news லக்னோவுடன் இன்று மோதல் - பிளே ஆஃப் வாய்ப்பை பலப்படுத்தும் முனைப்பில் ஹைதராபாத்

லக்னோவுடன் இன்று மோதல் - பிளே ஆஃப் வாய்ப்பை பலப்படுத்தும் முனைப்பில் ஹைதராபாத்

ஹைதராபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் -0.065 நிகர ரன் ரேட்டுடன்4-வது இடத்தில் உள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் -0.371 நிகர ரன் ரேட்டுடன் 5-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை