UA-201587855-1 Tamil369news சிம்பு படத்தில் பாலிவுட் ஹீரோயின்கள்?

சிம்பு படத்தில் பாலிவுட் ஹீரோயின்கள்?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதையடுத்து சிலம்பரசன் நடிக்கும் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சிலம்பரசனின் 48-வது படமான இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இதில் கியாரா அத்வானியும், ஜான்வி கபூரும் நாயகிகளாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இறுதி உறுதியானால் ஜான்வி கபூர், தமிழில் அறிமுகமாகும் படமாக இது இருக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை