ஹைதராபாத்: ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நவீன் சந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள ‘ஜரகண்டி’என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ மார்ச் மாதம் வெளியானது. இந்நிலையில் இதுவரை, தான் நடித்ததிலேயே மிகவும் சவாலான பாடல் காட்சி இதுதான் என்று கியாராஅத்வானி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ‘ஜரகண்டி’ தான் இந்தப் படத்துக்காகப் படமாக்கப்பட்ட முதல் பாடல். ஒரு பாடலுக்கு 10 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது இந்தப்படத்துக்குத்தான். பிரபுதேவா இதற்கு நடன இயக்குநர். சில கடினமான ஸ்டெப்ஸ்களும் உண்டு. ஒத்திகைக்குப் பிறகே ஆடினோம். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகி இருக்கிறது. அவர் ‘ஜரகண்டி’யில் என் நடனத்தைப் பாராட்டினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்