UA-201587855-1 Tamil369news டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்கதேசம் இன்று மோதல்

நியூயார்க்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடர் நாளை (2-ம் தேதி) அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி அயர்லாந்துடன் மோதுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டம் ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராக யாரை களமிறக்குவதற்கு என்பதற்கும், ஜஸ்பிரீத் பும்ராவுடன் மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக யாரை களமிறக்குவது என்பதற்கும் தீர்வு காணக்கூடியதாக அமையக்கூடும். ஏனெனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால் விளையாடும் லெவனில் ஷிவம் துபே இடம் பெறுவது சந்தேகம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை