UA-201587855-1 Tamil369news யூரோ கோப்பை கால்பந்து | ஜெர்மனி அணி சாதனை வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது

யூரோ கோப்பை கால்பந்து | ஜெர்மனி அணி சாதனை வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது

முனிச்: 17-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. 24 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் முதல் லீக்ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்துடன் மோதியது. 10-வது நிமிடத்தில்ஜெர்மனி முதல் கோலை அடித்தது. ஆடுகளத்தின் மையப்பகுதியில் இருந்து டோனி குரூஸ் உயரமாக அடித்த ஷாட்டை பெற்ற ஜோசுவா கிம்மிச் பந்தை பாக்ஸின் மையப்பகுதிக்கு சற்று வெளியே நின்ற 21 வயதான புளோரியன் விர்ட்ஸ் கிராஸ் செய்ய, அவர் அதனை ஸ்காட்லாந்து அணியின் 3 டிபன்டர்களுக்கு ஊடாக கோல் வலைக்குள் திணித்தார்.

இதன் மூலம் யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனிக்காக குறைந்த வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை புளோரியன் விர்ட்ஸ் பெற்றார். 19-வது நிமிடத்தில் ஜெர்மனிஅடுத்த கோலை அடித்தது. இல்கே குண்டோகன் பந்தை பாக்ஸ் பகுதிக்குள் நின்ற ஹய் ஹாவர்ட்ஸிடம் தட்டிவிட அவர், அதை ஜமால் முசியாலாவுக்கு திருப்பிவிட்டார். நொடிப்பொழுதில் ஜமால் முசியாலா அதை கோலாக மாற்றினார். இதனால் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை