UA-201587855-1 Tamil369news நார்வே செஸ் தொடரில் சாதனை: பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின், அண்ணாமலை வாழ்த்து

நார்வே செஸ் தொடரில் சாதனை: பிரக்ஞானந்தாவுக்கு ஸ்டாலின், அண்ணாமலை வாழ்த்து

சென்னை: நார்வே செஸ் தொடரில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்சனை வென்றதுடன், 5-ம் சுற்றில் தற்போது உலகின் 3-ம் நிலை வீரர் பேபியானோ கருணாவையும் ‘கிளாசிக்கல் செஸ்' வகைப் போட்டியில் வீழ்த்தியிருப்பது மிகப்பெரும் சாதனையாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை