UA-201587855-1 Tamil369news அதிக அளவிலான டாட் பந்துகளால் தோல்வி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கருத்து | T20 WC

அதிக அளவிலான டாட் பந்துகளால் தோல்வி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கருத்து | T20 WC

நியூயார்க்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கு அதிக அளவிலான பந்துகளில் ரன்கள் (டாட் பால்கள்) சேர்க்காமல் விட்டதே காரணம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் உள்ள நசாவு கவுண்டிகிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 120 ரன்கள் இலக்கைதுரத்திய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சவாலான ஆடுகளத்தில் எளிதான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக அளவிலான பந்துகளை வீணடித்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த அணி 59 பந்துகளை ரன் சேர்க்காமல் வீணடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை