UA-201587855-1 Tamil369news மேற்கு இந்தியத் தீவுகள் உடனான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 371 ரன் குவிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் உடனான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து 371 ரன் குவிப்பு

லண்டன்: இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 41.4 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 40 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 15, ஹாரி புரூக் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை