வாஷிங்டன்: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகுவதாக வெளியிட்ட அறிவிப்புக்கு நடிகர் ஜார்ஜ் க்ளூனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜார்ஜ் க்ளூனி, “உண்மையான தலைமைப் பண்பு என்றால் என்னவென்று ஜோ பைடன் காட்டியுள்ளார். அவர் மீண்டும் ஒருமுறை ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளார். கமலா ஹாரிஸின் வரலாற்றுத் தேடலுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் பயந்து, ஒவ்வொரு எச்சரிக்கை அறிகுறியையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்