பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (ஆகஸ்ட் 3) இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் தனிநபர் பிரிவில் பங்கேற்று விளையாட உள்ளனர். அது குறித்து பார்ப்போம்.
- துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான ஸ்கீட் தகுதி சுற்றில் ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான் பங்கேற்பு. நேரம்: பகல் 12:30
- துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் மனு பாகர் பங்கேற்பு. நேரம்: பகல் 1 மணி
- மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செல்லி க்ரோப்பனுடன் மோதுகிறார். நேரம்: பகல் 1:50
- மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்தியாவின் பஜன் கவுர், இந்தோனேஷியாவின் தியானந்த கொய்ருனிசாவுடன் மோதுகிறார். நேரம்: பகல் 2 மணி.
- பாய்மரப்படகில் ஆடவருக்கான டிங்கி ரேஸில் இந்தியாவின் விஷ்ணு சரவணன் பங்கேற்பு. நேரம்: மாலை 3:45
- பாய்மரப்படகில் மகளிருக்கான டிங்கி ரேஸில் இந்தியாவின் நேத்ரா குமணன் பங்கேற்பு. நேரம்: மாலை 4.53
- குத்துச்சண்டையில் ஆடவருக்கான வெல்டர்வெயிட் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ வேர்டுடன் மோதுகிறார். நேரம்: நள்ளிரவு:12.20
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்