UA-201587855-1 Tamil369news சேப்பாக்கம் மைதானத்தில் இன்று டிஎன்பிஎல் இறுதிப் போட்டி

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று டிஎன்பிஎல் இறுதிப் போட்டி

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

நடப்பு சாம்பியனான கோவை அணி தகுதி சுற்று 1-ல் திருப்பூர் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸையும், தகுதி சுற்று 2-ல் திருப்பூர் அணியையும் வீழ்த்தி இறுதி சுற்றில் கால்பதித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை