UA-201587855-1 Tamil369news பின்னணி பாடகர் பி.சுசிலா மருத்துவமனையில் அனுமதி

பின்னணி பாடகர் பி.சுசிலா மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பிரபல சினிமா பின்னணி பாடகர் பி.சுசிலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

88 வயதான அவர் சிறுநீரகக் கோளாறு மற்றும் வயது முதிர்வு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘நைட்டிங்கேல்’ என அறியப்படுகிறார். 1950-கள் முதல் சினிமாவில் பின்னணி பாடகியாக அவரது பயணத்தை தொடங்கினார். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக 17,000+ பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்திய மொழிகளில் அதிக பாடல்களை பாடியவராக அறியப்படுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை