UA-201587855-1 Tamil369news ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும்: முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும்: முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

துபாய்: பந்து வீச்சாளர்களின் தரம் மற்றும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை உள்ளடக்கிய வலுவான பேட்டிங் வரிசை ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தொடர்ச்சியாக 3-வது முறையாக இந்திய அணி வெல்லும் என முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களையும் இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது. இதற்கு இம்முறை ஆஸ்திரேலிய பதிலடி கொடுக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றும் என அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை