UA-201587855-1 Tamil369news பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்: கோலாகலமாக நிறைவுற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்: கோலாகலமாக நிறைவுற்ற பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி

பாரிஸ்: பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவுற்றது.

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அணிவகுப்பு பாரிஸ் நகரில் உள்ள சீன் நதியில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது . படகுகளில் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணி வகுத்து உற்சாகமாக வந்தனர். இந்நிலையில், கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகள் நேற்று நிறைவுற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை