UA-201587855-1 Tamil369news நடிகர் தேர்வு குறித்த போலி விளம்பரங்கள்: லைகா நிறுவனம் எச்சரிக்கை!

நடிகர் தேர்வு குறித்த போலி விளம்பரங்கள்: லைகா நிறுவனம் எச்சரிக்கை!

சென்னை: தங்கள் நிறுவனம் பெயரில் நடிகர்கள் தேர்வு குறித்த போலி விளம்பரங்களை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று லைகா நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: “லைகா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பல அதிகாரபூர்வமற்ற நடிகர் தேர்வுக்கான விளம்பரங்கள் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கான காஸ்டிங் அழைப்புகள் அல்லது ஆடிஷன்கள் எங்களின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்கள் மூலம் மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை