தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக சுசீந்திரன் என்ற நடிகர் மீது தயாரிப்பாளர் முக்தா பிலிம்ஸ் முக்தா ரவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, கூறியதாவது: எங்களுடைய முக்தா பிலிம்ஸ் நிறுவனம் 1960-ம் ஆண்டு தொடங்கியது. சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து 40-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளோம். இப்போது இந்த நிறுவனத்தை நான் நிர்வகித்து வருகிறேன். தற்போது எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. சொந்தமாக ஓடிடி தளம் தொடங்கும் முயற்சியில் இருக்கிறோம். இந்நிலையில் சுசீந்திரன் என்ற நடிகர், முக்தா
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்