UA-201587855-1 Tamil369news இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக ராமாயணம் அனிமேஷன் திரைப்படம் அக்.18 முதல் தமிழில் வெளியாகிறது

இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக ராமாயணம் அனிமேஷன் திரைப்படம் அக்.18 முதல் தமிழில் வெளியாகிறது

புதுடெல்லி: ஜப்பானிய-இந்திய அனிமேஷன் படமாகக் கடந்த 1993-ம்ஆண்டில் தயாரிக்கப்பட்ட, “ராமாயணா: தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா” திரைப்படம் இந்தியாவில் வரும் அக்.18-ம் தேதி வெளியாகிறது.

இயக்குநர்கள் யுகோ சகோ, ராம் மோகன் மற்றும் கொயிச்சி சசகி ஆகியோர் இணைந்து இயக்கிய இந்த அனிமேஷன் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் முதன்முறையாக வெளிவரவிருக்கிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் 4கேஃபார்மெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அனிமேஷன் ராமாயணம் ஏற்கெனவே 2000-ம்ஆண்டில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை