புடாபெஸ்ட்: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி யின் 4-வது சுற்றிலும் இந்திய ஆடவர் அணியினர் வெற்றி கண்டனர்.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி நேற்று நடைபெற்ற 4-வது சுற்றில் செர்பியாவை எதிர் கொண்டது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ் 85-வது காய் நகர்த்தலின் போது பிரட்கே அலெக்சாண்டரை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, செர்பியா வீரர் சரானா அலெக்ஸி ஆகியோர் இடையிலான ஆட்டம் 23-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்