UA-201587855-1 Tamil369news ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் லீக் சுற்றில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அரை இறுதி சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் நேற்று கொரியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிதரப்பில் அரஜீத் சிங் ஹுன்டால் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 9 மற்றும் 43-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். கொரிய அணி சார்பில் 30-வது நிமிடத்தில் ஜிஹுன் யாங் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (14-ம் தேதி) பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை