UA-201587855-1 Tamil369news அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம்

அண்டை மாநிலங்களில் ‘தி கோட்’ அதிகாலைக் காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் அதிகாலைக் காட்சி கேரளாவில் தொடங்கியது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் இன்று (செப்.05) திரையரங்குகளில் வெளியாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை