UA-201587855-1 Tamil369news தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அணி சாதனை

ஷார்ஜா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரை வென்று சாதனை படைத்தது.

ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. தனது 7-வது சதத்தை விளாசிய தொடக்க வீரானரஹ்மனுல்லா குர்பாஸ் 110 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் விளாசினார். அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 50 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 86 ரன்களும், ரஹ்மத் ஷா 66 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை