UA-201587855-1 Tamil369news நடிகர் சங்க கடனை அடைக்க கலை நிகழ்ச்சி: நாடகத்தில் நடிக்கும் ரஜினி, கமல்! - கார்த்தி தகவல்

நடிகர் சங்க கடனை அடைக்க கலை நிகழ்ச்சி: நாடகத்தில் நடிக்கும் ரஜினி, கமல்! - கார்த்தி தகவல்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சிமுருகன், கருணாஸ், உறுப்பினர்கள் லதா சேதுபதி, சோனியா, பசுபதி, ராஜேஷ், கோவை சரளா,ஸ்ரீமன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில், டெல்லி கணேஷ், சி.ஆர்.விஜயகுமாரி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, பசி சத்யா, அழகு, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி உள்ளிட்ட 10 பேருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதும் அவர் முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலரும்வழங்கப்பட்டன. படித்து 3 பட்டங்கள் பெற்றதற்காக முத்துக்காளைக்கும் தங்க டாலர் வழங்கப்பட்டது. பொதுக்குழுவில் நிர்வாகிகளின் பதவி காலத்தை 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை