சென்னை: தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 3,638 மாணவர்கள் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக இணைவேந்தரும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக அளவில் உடற்கல்வி, விளையாட்டுபயிற்சி விளை யாட்டு மேலாண்மை உள்ளிட்ட பல் வேறு பாடங்களில் சிறப்பிடம் பெற்ற 37 மாணவ, மாணவி களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தம் 3,638 பேருக்கு பட்டம் வழங்கப் பட்டது. அவர்களில் 37 பேர் பிஎச்டி பட்டதாரிகள். இந்திய கூடைப் பந்து அணியின் முன்னாள் கேப் னும் பத்மஸ்ரீ விருது பெற்றவரு மான அனிதா பால்துரை கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்