UA-201587855-1 Tamil369news “படம் முழுக்க என் முகத்தில் புன்னகை” - ‘மெய்யழகன்’ படத்துக்கு நாகர்ஜுனா பாராட்டு

“படம் முழுக்க என் முகத்தில் புன்னகை” - ‘மெய்யழகன்’ படத்துக்கு நாகர்ஜுனா பாராட்டு

சென்னை: கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்துக்கு நடிகர் நாகர்ஜுனா பாராட்டு தெரிவித்துள்ளார். படம் முழுக்க தன்னுடைய முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நாகர்ஜுனா அக்கினேனி கூறியுள்ளதாவது: “அன்புச் சகோதரர் கார்த்தி, உங்கள் ‘மெய்யழகன்’ படத்தை நேற்று இரவு கண்டேன். நீங்களும் அரவிந்த் ஜியும் மிகச் சிறப்பாக நடித்திருந்தீர்கள். படம் முழுக்க உங்களை பார்க்கும்போது என் முகத்தில் புன்னகை இருந்துகொண்டே இருந்தது. அதே புன்னகையுடன் உறங்கச் சென்றேன். என்னுடைய குழந்தைப்பருவ நினைவுகள் பலவற்றை மீண்டும் கொண்டு வந்தது. கூடவே நம்முடைய ‘தோழா’ திரைப்படத்தின் நினைவுகளையும். இதுபோன்ற இதயத்துக்கு இதமான படங்களை மக்களும் விமர்சகர்களும் பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” இவ்வாறு நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்,



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை