தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் அம்ரித் ராம்நாத். பிரபல கர்நாடக இசைப் பாடகி, பாம்பே ஜெயஸ்ரீ-யின் மகன். பல சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள இவர், மலையாளத்தில் வெளியான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்துக்கு ஏற்கெனவே இசை அமைத்திருக்கிறார்.
“இசை அமைப்பாளரா ஆகணுங்கற ஆசை, சின்ன வயசுலயே எனக்குள்ள இருந்தது. எப்பவும் இசைக்காக அதிகநேரத்தை செலவழிச்சேன். கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் கத்துக்கிட்டேன். அம்மா கூட நானும்பாடப் போவேன். ஸ்கூல் படிப்பை முடிச்சதும் முழுசா மியூசிக் பயிற்சிகள்ல இறங்கிட்டேன். இசை அமைப்பாளரா ஆகணும்னா, அதுக்கு என்ன மாதிரி உழைப்பு தேவை, அதை எப்படி பண்றதுன்னு நானாகவே தெரிஞ்சுகிட்டேன். அம்மா எப்போதும், ‘என்ன பண்ணினாலும் நீ நீயாகத்தான் இருப்பே, நான் நானாகத்தான் இருப்பேன்’னு சொல்வாங்க. அதோட ‘எதையும் நேர்மையா பண்ணினா அதுக்கான இடம் கிடைக்கும்’னும் சொல்லுவாங்க. அதை கடைபிடிச்சுதான், ஆல்பங்கள் பண்ணினேன். இதுவரை 25 ஆல்பங்கள் பண்ணியிருக்கிறேன்” என்று ஆரம்பிக்கிறார், அம்ரித் ராம்நாத்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்