UA-201587855-1 Tamil369news ஜாஸ் பட்லர் அதிரடியில் 2-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி

ஜாஸ் பட்லர் அதிரடியில் 2-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி

பிரிட்ஜ்டவுண்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜாஸ் பட்லரின் அதிரடி காரணமாக இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிட்ஜ்டவுணில் நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவல் 43, ரோமரியோ ஷெப்பர்டு 22, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சகீப் மஹ்மூத், லியாம் லிவிங்ஸ்டன், டான் மவுஸ்லி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை