UA-201587855-1 Tamil369news ‘விடாமுயற்சி’ டீசர் எப்படி? - ஸ்டைலிஷ் அஜித், விறுவிறு காட்சிகள்! 

‘விடாமுயற்சி’ டீசர் எப்படி? - ஸ்டைலிஷ் அஜித், விறுவிறு காட்சிகள்! 

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் எப்படி? - நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து ஹீரோ அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, த்ரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான ஷாட் என அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன.

அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் கூடிய கார் சேஸிங், அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகல் டீசரில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம் ஹாலிவுட் த்ரில்லர் பாணியிலான காட்சியமைப்புகளும் நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் டீசரை இன்னும் சற்றே சுவாரஸ்யமாக கட் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறவைக்கும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதுவும் டீசரில் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை