UA-201587855-1 Tamil369news தேசிய சீனியர் ஹாக்கி: பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

தேசிய சீனியர் ஹாக்கி: பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி

சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன் ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பஞ்சாப் அணி 10-1 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணி தரப்பில் பல்வீந்தர் சிங், குர்சாஹிப்ஜித் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். அங்கத் பிர் சிங், சுர்தர்ஷன் சிங், மணீந்தர் சிங், பிரதீப் சிங், குர்ஜிந்தர் சிங், ரவ்னீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

‘இ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டங்களில் ராஜஸ்தான் 4-3 என்ற கோல் கணக்கில் அருணாச்சல பிரதேச அணியையும், ஒடிசா 6-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியையும் தோற்கடித்தன. ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மிசோரம் 6-3 என்ற கோல் கணக்கில் இமாச்சல் பிரதேச அணியையும், ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் 12-2 என்றகோல் கணக்கில் பிஹார் அணியையும் வீழ்த்தின. ‘ஜி’ பிரிவில் மகாராஷ்டிரா - ஜார்க்கண்ட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை