UA-201587855-1 Tamil369news மன்மோகன் சிங் மறைவு - ‘சிக்கந்தர்’ டீசர் வெளியீடு தள்ளிவைப்பு

மன்மோகன் சிங் மறைவு - ‘சிக்கந்தர்’ டீசர் வெளியீடு தள்ளிவைப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு, ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இன்று (டிச.27) சல்மான்கான் தனது 59-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் காலை 11:07 மணிக்கு வெளியாக இருந்தது. தற்போது இந்த டீசர் நாளை காலை 11:07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை