வடோதரா: குஜராத் மாநிலம் வடோதராவில் யுடிடி 86-வது ஜூனியர் மற்றும் இளையோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இதில் மகளிருக்கான யு-19 ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ஹன்சினி, ஹரியானாவைச் சேர்ந்த சுகானா சைனியை எதிர்த்து விளையாடினார். இதில் ஹன்சினி 4-2 (1-11,11-9, 13-11,11-9, 10-12,11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்