UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதி சுற்றில் கால்பதித்தனர் ஜன்னிக் சின்னர், இகா ஸ்வியாடெக்

மெர்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோர் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

மெர்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 9-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 13-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனேவுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-3, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை