UA-201587855-1 Tamil369news மலேசிய ஓபன் பாட்மிண்டனில் மழை நீர் ஒழுகியதால் பிரணாய் போட்டி நிறுத்தம்

மலேசிய ஓபன் பாட்மிண்டனில் மழை நீர் ஒழுகியதால் பிரணாய் போட்டி நிறுத்தம்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழை காரணமாக மேற்கூரை ஒழுகியது.

ஆடுகளத்தின் இடது பகுதியில் மழைநீர் தேங்கத் தொடங்கியதால் போட்டி நடுவரிடம் பிரணாய் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. மேற்கூரையில் ஒழுகிய பகுதி சரிசெய்யப்பட்டு சுமார் 3 மணி நேரம் 25 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை