சென்னை: டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் வரும் மார்ச் 25 முதல் 30-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூ.2.38 கோடியாகும். 25 மற்றும் 26-ம் தேதிகளில் தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதான சுற்று 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் இந்தத் தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடரின் கடந்த இரு பதிப்புகள் கோவாவில் நடைபெற்றது. 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் ஆடவர் பிரிவில் சீனாவின் லியாங் ஜிங்குன்னும், மகளிர் பிரிவில் சீனாவின் வாங் யிடியும் பட்டம் வென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்